செய்திகள்

நீர்வரத்து குறைந்தது: சரிந்து வரும் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்

முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.

மாலை மலர்

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் நீரை தேக்கும் பொருட்டு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.60 அடியாக சரிந்துள்ளது. எனவே விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

அணைக்கு 241கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 467 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் 53.48 அடியாக உள்ளது. 204 கனஅடி நீர் வரும் நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 60 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாக உள்ளது. 4 கன அடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 118.40 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 30 கனஅடியாக உள்ளது. கூடலூர் 1.5, உத்தமபாளையம் 7.6, சண்முகாநதிஅணை 2, வீரபாண்டி 38, வைகை அணை 8 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.