கோப்புப்படம் 
செய்திகள்

காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: 2 சிஆர்பிஎப் வீரர்கள், 2 போலீசார் பலி

ஜம்மு-காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சண்டையில் இரண்டு சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் பாபாகண்டில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து 3-வது நாளாக பயங்கரவாதிகளுடன் வீரர்கள் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகிறார்கள். இதில் சிஆர்பிஎப் வீரர்கள் இரண்டு பேர் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் போலீசார் இரண்டு பேர்  பலியாகியுள்ளனர். இன்னும் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT