தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 
செய்திகள்

10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி: தெலுங்கானா முதல்வர் முடிவு

கொரோனா வைரஸ் தொற்றால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த சிரமம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்களை தேர்வு இன்று தேர்ச்சி பெற்றதாக தெலுங்கானா மாநிலம் அறிவிக்க இருக்கிறது.

மாலை மலர்

பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏறக்குறைய முடிந்து விட்ட காரணத்தால் மார்ச் 25-ந்தேதிக்குப்பிறகு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் ஒரு சில பாடத்தேர்வு மட்டுமே பாக்கி உள்ளது.

ஆனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்காததால் ஒவ்வொரு மாநிலமும் முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. 10-ம் வகுப்பு மார்க் அடிப்படையில்தான் 11-ம் வகுப்பில் மாணவர்கள் எந்த பிரிவை தேர்வு செய்வது என்பது நிர்ணயிக்கப்படும். இதனால் பொதுத்தேர்வை நடத்த பல மாநிலங்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் தேர்வுகளை நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.