ஆளுநராக பதவியேற்ற தாவர்சந்த் கெலாட் 
செய்திகள்

கர்நாடக ஆளுநராக பதவியேற்றார் தாவர்சந்த் கெலாட்

கர்நாடக மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட தாவர்சந்த் கெலாட் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

பெங்களூரு:

மத்திய மந்திரிசபை விரிவாக்கத்திற்கு முன்னதாக, 4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். 4 மாநிலங்களின் கவர்னர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டனர். 

கர்நாடக மாநிலத்தின் புதிய ஆளுநராக மத்திய மந்திரி தாவர்சந்த் கெலாட் நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று பதவியேற்றார். அவருக்கு மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா, பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

SCROLL FOR NEXT