சூதாட்டம் கைது 
செய்திகள்

தவுட்டுப்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

தவுட்டுப்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நொய்யல்:

தவுட்டுப்பாளையம் அருகே கட்டிபாளையம் காவிரி ஆற்றுக்குள் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடியதாக கட்டிபாளையம், என்.புகளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பிரபாகரன் (வயது 34), கவுரிசங்கர் (22), புகழ்செல்வன் (31), பரமசிவம் (55), பாஸ்கர் (24) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.970 பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT