தனியரசு எம்எல்ஏ 
செய்திகள்

தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்தவேண்டும் - சட்டசபையில் தனியரசு எம்எல்ஏ வலியுறுத்தல்

தமிழக சட்டசபையில் பேசிய எம்.எல்.ஏ. தனியரசு, தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக சட்டசபையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு எம்.எல்.ஏ. இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 

தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர்.

வடநாட்டில் இருந்து வந்து தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என எட்டிப்பார்த்தனர். எட்டிப்பார்த்த வடநாட்டினரை எடப்பாடி பழனிசாமி வென்றுவிட்டார்.  ஏழை விவசாயி, விவசாயிகளின் செல்லப்பிள்ளை எடப்பாடி பழனிசாமி  என தெரிவித்தார்.