திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இன்று புதிய சார்புநீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது,
பரோலில் வந்துள்ள சசிகலாவை இன்னும் ஓரிரு நாட்களில் தமிமுன் அன்சாரி, கருணாசுடன் சேர்ந்து சந்திக்க உள்ளேன். அப்போது பிரிந்து கிடக்கும் இயக்கத்தை ஒன்று சேர்க்க வலியுறுத்துவோம். மத்திய பாரதிய ஜனதா ஆட்சியின் பிடியில் இருந்து அ.தி.மு.க.வை மீட்க வலியுறுத்துவோம்.
எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறி வருகிறார்கள். இது திராவிட கட்சிகளுக்கு விதிக்கப்படும் சவால். இதனை அனைவரும் ஒன்று இணைந்து முறியடிக்க வேண்டும். பரோலில் வந்துள்ள சசிகலாவுக்கு கெடுபிடி விதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.