ஆரணி:
ஆரணியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது :-
விரைவில் மத்திய, மாநில ஆட்சிகள் மாறும். உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைத்தே தீரவேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தினால் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளோடு இணைந்து தொடர் போராட்டம் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும்.
பாரதிய ஜனதா கட்சி 4 ஆண்டு ஆட்சியில் விவசாயிகள் பிரச்சினை தொழிலாளர், நெசவாளர் பிரச்சினை மற்றும் இந்திய மக்கள் யாரும் நிம்மதியாக வாழவில்லை பணமதிப்பீடு, ஜி.எஸ்.டி. வந்த பிறகு மத்திய அரசு பொதுமக்களை வாட்டி எடுத்துள்ளது. இந்தியாவில் நடைபெற்று வருகின்ற பிரச்சனைகளுக்கு மோடி அரசுதான் காரணம். கர்நாடக தேர்தல் பற்றி தற்போது கூற முடியாது.
இவ்வாறு அவர் பேசினார். #KVThangkabalu #TNPolitics