செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் எந்த சின்னத்தில் நின்றாலும் தினகரன் அணி வெற்றி பெறும்- தங்கதமிழ்செல்வன்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் எந்த சின்னத்தில் நின்றாலும் வெற்றி பெறும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #TTVDhinakaran #ThangaTamilselvan

மதுரை அவனியாபுரம் 60-வது வார்டில் தினகரன் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

பகுதி செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர்கள் மகேந்திரன், ஜெயபால், இளைஞரணி துணைச் செயலாளர் ஜோதிராமலிங்கம், வார்டு செயலாளர் வழிவிட்டான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தங்கதமிழ் செல்வன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளையில் அமைச்சர்களுக்கு பங்கு உள்ளது.