செய்திகள்

நடராஜன் மறைவுக்கு ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். இரங்கல் தெரிவிக்காதது வேதனை - தங்க தமிழ்செல்வன்

சசிகலாவின் ஆசியால் பதவிபெற்ற ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் மற்றும் சிலர் நடராஜன் மறைவுக்கு இரங்கல் கூட தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #natarajandeath #thangatamilselvan #edappadipalanisamy #opanneerselvam

தஞ்சாவூர்:

தஞ்சையில் நடராஜன் உடலுக்கு  தினகரன் அணி ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது சசிகலாவின் பரோலுக்கு எந்த எம்.பிக்களும் கையெழுத்து இடாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆனால் அ.தி.மு.கவின் அனைத்து எம்.பி.களும் எங்களுக்கு தான் ஆதரவு அளிக்கின்றனர். எங்கள் அணிக்கு அவர்கள் வர தயார் நிலையில் உள்ளன. 

சசிகலாவின் பரோலுக்கு கோவை நாகராஜன் எம்.பி. கையெழுத்துயிட்டுள்ளார். இதைடுத்து பரோலில் வந்தார். ஆனால் சசிகலாவின் ஆசியால் பதவிபெற்ற ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் மற்றும் சிலர் நடராஜன் மறைவுக்கு இரங்கல் கூட தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது.

இது தமிழக அரசியல் மரபா? இதற்காக பலனை அவர்கள் விரைவில் சந்திக்க நேரிடும். 

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews  #natarajandeath #thangatamilselvan #edappadipalanisamy #opanneerselvam