செய்திகள்

அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம்: தங்கதமிழ்ச்செல்வன்

அ.தி.மு.க.வில் ஊழல் செய்த அமைச்சர்களின் பட்டியலை சட்டசபையில் நுழைந்த பின்பு வெளியிடுவோம் என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறினார்.

மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு, கட்சி கட்டுப்பாடின்றி செயல்படுவதால் தமிழகம் விரைவில் மிகப் பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் கட்சி நிர்வாகிகளை வெற்றி பெறச் செய்யாவிடில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறும் ஆர்.பி.உதயகுமார், இப்போதே ராஜினாமா செய்தால் மக்களுக்கும் ஆட்சிக்கும் நன்மை கிடைக்கும்.

அ.தி.மு.க.வில் நிலவும் கட்டுப்பாடற்ற செயல்பாடுகள் குறித்து திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. போஸ் கூறியது உண்மை தான். அ.தி.மு.க.வில் ஊழல் செய்த அமைச்சர்களின் பட்டியலை, சட்டசபையில் நுழைந்த பின்பு வெளியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

SCROLL FOR NEXT