செய்திகள்

மேல் முறையீடு செய்தாலும் பலன் அளிக்காது- தங்க தமிழ்செல்வன் பேட்டி

இரட்டை இலை சின்னம் வழக்கில் மேல் முறையீடு செய்தாலும் பலன் அளிக்காது என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #thangatamilselvan #admkleaf

மாலை மலர்

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டியில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்திற்கு வந்த கட்சி கொள்கை பரப்பு செயலாளர் தங்கத மிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எதிர்பார்த்ததுதான். நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் மக்கள் மன்றத்தில் அ.தி.மு.க. மிகபெரிய தோல்வியை சந்திக்கும். எங்களை பொறுத்த வரையில் சின்னம் முக்கியம் இல்லை. ஏற்கனவே ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்றோம். சின்னத்தை மீட்க வேண்டும் என்று தான் நாங்கள் போராடினோம். எங்கள் பொது செயலாளர் சசிகலா தலைமையில் சின்னம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி உரிய ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தோம். 

இருந்த போதிலும் இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். வருகிற பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க.மிக பெரிய தோல்வியை சந்திக்கும். 

தற்போது வந்து உள்ள தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் எந்த பலனும் இல்லை. மக்கள் கூறும் தீர்ப்பின் அடிப்படையில்  பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #thangatamilselvan #admkleaf