பெங்களூரு:
புதுச்சேரி விடுதியில் தங்கி இருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஜக்கையன் திடீரென்று எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினார்.
மேலும் 9 எம்.எல்.ஏக்கள் தினகரன் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவ இருப்பதாக ஜக்கையன் எம்.எல்.ஏ. கூறியதை மேற்கோள் காட்டி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி உள்ளார்.
இதுகுறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்செல்வனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பணத்தாசை காட்டி அவர்கள் எம்.எல்.ஏ.க்களை இழுக்கிறார்கள். பணம் பாதாளம் வரை பாயும் என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது. எங்கள் அணியைச் சேர்ந்த 9 பேரும் அணி தாவ மாட்டார்கள். அவர்கள் அண்ணன் தினகரனுக்கு ஆதரவு கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொய் சொல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.