அ.தி.மு.க.வின் அணிகள் இணைப்பில் முட்டுக்கட்டை நீடித்து வரும் நிலையில், கட்சியில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறிய துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார். இதனால், அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனால் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுக்கப் போவதில்லை என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறினார்.
இதற்கிடையே தினகரனை சந்தித்த தங்க தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ. கூறும்போது, “தினகரனுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதுபற்றி விரைவில் செய்தி வரும். ஓபிஎஸ் போன்று கட்சியையும் ஆட்சியையும் கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம்.