தண்டராம்பட்டு:
விழுப்புரம் மாவட்டம் கடுவனூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் இவர்கள் இருவரும் தண்டராம்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மாலை பைக்கில் வீடு திரும்பினர்.
தண்டராம்பட்டு அருகே உள்ள நெய்யூர் என்ற இடத்தில் பைக் சென்ற போது முன்னால் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். அஜித்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.