செய்திகள்

நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும்- தமிமூன் அன்சாரி

உயிர் பலி வாங்கும் நீட் தேர்வினை அகில இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டும் என்று கரூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரி தெரிவித்துள்ளார். #NEET #NEETExam

மாலை மலர்

கரூர்:

கரூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  

அப்போது அவர் கூறிய தாவது:-

நீட் தேர்வு ஏழை-எளிய மக்கள் மற்றும் சமூகத்தின் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. பிற்படுத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு முறையினை நீர்த்துப்போக செய்வதற்கான சதி வேலைதான் இது. எனவே உயிர் பலி வாங்கும் நீட் தேர்வினை அகில இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டும்.

நீட் தேர்வினை வெளிமாநிலங்களுக்கு சென்று எழுதும் வகையில் சூழலை உருவாக்கி தமிழக மாணவர்களிடையே அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி மத்திய அரசு சதி செய்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு நோட்டோவை விட அதிக வாக்கு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். தமிழகத்தில் காவிரி, அமராவதி உள்ளிட்ட ஆறுகளில் மணல் கொள்ளை அதிகரித்து விட்டது. எனவே மலேசியாவில் அதிகம் கிடைக்கக்கூடிய மணலை இறக்குமதி செய்ய வேண்டும்.  

இவ்வாறு அவர் கூறினார்.  #NEET #NEETExam