தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. 
செய்திகள்

கைதிகளுக்கு ஒருமாதம் பரோல் வழங்க வேண்டும்- தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. வேண்டுகோள்

சிறை தண்டனை கைதிகளுக்கு ஒருமாதம் பரோல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

காரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக சிறைவாசி குடும்பங்களை சேர்ந்தவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். சிறையிலிருக்கும் தங்கள் உறவுகளை நினைத்து வாடுகின்றனர்.

தண்டனை சிறை கைதிகளுக்கு வழி காவல் துணையின்றி ஒரு மாத கால பரோல் வழங்க வேண்டுஎன்ற கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசிலிக்க வேண்டும். அதுபோல் விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்குவது குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.