தம்பிதுரை எம்பி 
செய்திகள்

தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் -தம்பிதுரை எம்பி வலியுறுத்தல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசின் நிதி போதுமானதாக இல்லை என்று மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை பேசினார்.

மாலை மலர்

புதுடெல்லி:

மாநிலங்களவையில் இன்று பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசின் நிதி போதுமானதாக இல்லை என்றும், தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9000 கோடி வரை தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.  

தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.