தளவாய்சுந்தரம் 
செய்திகள்

சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் வேட்பாளர்- தளவாய்சுந்தரம் பேட்டி

வருகிற சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.

நாகர்கோவில்:

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், “வருகிற சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் வேட்பாளர்.

அவரை முன்னிறுத்தி தான் சட்டசபை தேர்தலை சந்திக்க முடியும். இதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. நிர்வாக திறமை, கொரோனா தடுப்பு பணி மற்றும் ஆய்வு பணிகளில் எடப்பாடி பழனிசாமி சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார்“ என்றார்.

SCROLL FOR NEXT