செய்திகள்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சவுரவ் வர்மா, சாய் பிரனீத் 3-வது சுற்றுக்கு தகுதி

பாங்காங்கில் நடந்து வரும் தாய்லாந்து ஓபன் கிராண்ட்பிரீ பேட்மிண்டன் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சவுரவ் வர்மா, சாய் பிரனீத் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மாலை மலர்

பாங்காங் :

தாய்லாந்து ஓபன் கிராண்ட்பிரீ பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரவ் வர்மா 21-17, 20-22, 21-14 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் ஆனந்த் பவாரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-15, 21-13 என்ற நேர்செட்டில் மலேசிய வீரர் சதீஷ்தரனை சாய்த்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 14-21, 18-21 என்ற நேர்செட்டில் ஜெர்மனி வீரர் மார்க் விப்லெரிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.