செய்திகள்

தாக்கரே கூறியதுபோல் அடுத்த தேர்தலில் சிவசேனா தனித்து போட்டி - சிவசேனா மந்திரி திட்டவட்டம்

உத்தவ் தாக்கரே ஏற்கனவே கூறியதுபோல், அடுத்த தேர்தலில் சிவசேனா கட்சி தனித்து போட்டியிட உள்ளது என சிவசேனா மந்திரி ராம்தாஸ் காதம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.#sivasena

மாலை மலர்

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு நிதி மந்திரி சுதிர் முங்கந்திவார் பேசுகையில், அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வும்- சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. மக்களும் இதனைத்தான் விரும்புகின்றனர் என கூறினார்.

ஆனால், இவரது கருத்தை சிவசேனா தலைவரும் சுற்றுச்சூழல் துறை மந்திரியுமான ராம்தாஸ் காதம் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஏற்கனவே கூறியதுபோல், அடுத்த தேர்தலில் சிவசேனா கட்சி தனித்து போட்டியிட உள்ளது. யாருடன் கூட்டணி என்பதை கட்சி தலைவர் தாக்கரே தான் முடிவு செய்வார். பா.ஜ.க.வினர் அல்ல.

உ.பி. மற்றும் பீகார் மக்களவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. பெற்ற தோல்வி வெறும் டிரைலர் தான். முழு படத்துக்கு நீங்கள் சிறிது காத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #sivasena #Tamilnews