கைது 
செய்திகள்

பிரபல ஜவுளிக்கடையில் திருடிய ஊழியர் கைது

பிரபல ஜவுளிக்கடையில் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவர் சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடையில் விலை உயர்ந்த ஆடைகளை திருடி உள்ளார். அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

இது குறித்த புகாரின்பேரில் பாண்டிபஜார் போலீசார் ராமசுப்பிரமணியனை கைது செய்தனர்.