யானை 
செய்திகள்

தேவாரம் அருகே அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை

தேவாரம் பகுதியில் உள்ள தோட்டங்களில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது.

மாலை மலர்

உத்தமபாளையம்:

தேவாரம் பகுதியில் உள்ள தோட்டங்களில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. இந்த யானையிடம் சிக்கி தேவாரம் பகுதியை சேர்ந்த 11 பேரும், கேரள இடுக்கி மாவட்டத்தில் இருவரும் பலியாகியுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை சீசனான ஜூன், ஜூலையில் தான் இந்த யானை ஆக்ரோசமாக சுற்றுகிறது. இந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக மே மாதத்திலேயே ஆட்டத்தை துவக்கியுள்ளது.

பெரம்புவெட்டி புலத்தில் உள்ள ஈஸ்வரன், ராஜேஷ்வரன் தோட்டங்களில் புகுந்து வாழை, தென்னை, மரவள்ளியை நாசப்படுத்தியதுடன் வேலிக்காக அமைக்கப்பட்ட கல் தூண்களையும், வீட்டையும் சேதப்படுத்தியது.

கடந்த சில மாதங்களாக பயிர்களை மட்டும் நாசப்படுத்திய யானை, அறையை உடைத்துள்ளதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.