ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எப். மையத்தின் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தியதில் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா பகுதியில் சி.ஆர்.பி.எப். பயிற்சி மையம் அமைந்துள்ளது.
இந்த பயிற்சி மையத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பயிற்சி மையத்தில் இருந்த 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து, அந்த பயிற்சி மையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.