சுப்ரீம் கோர்ட், டெல்லி 
செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியின் பதவிக்காலம் நீட்டிப்பு

சுப்ரீம் கோர்ட்டின் அறிவுரையை ஏற்ற உத்தரப்பிரதேசம் மாநில அரசு பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி சுரேந்திர குமார் பதவிக்காலத்தை தீர்ப்பு வழங்கும் வரை நீட்டித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டின் பரிந்ர்துரையின்படி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு விசாரித்து வருகிறது.

இதற்கிடையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு சுப்ரீம்கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி உத்தரவிட்டது. மேலும் 2 ஆண்டுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.

இந்த 2 ஆண்டு கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிந்து விட்டது. இதையடுத்து, இந்த மாதம் 30-ம் தேதி பதவிக்காலம் முடியவுள்ள சிறப்பு கோர்ட்டு நீதிபதி சுரேந்திர குமார் கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி நரிமன் முன்னிலையில் நடந்தது. அப்போது அவர் சிறப்பு கோர்ட்டு நீதிபதிக்கு 6 மாதம் அவகாசம் அளிப்பது தொடர்பாக உத்தரபிரதேச அரசு வருகிற பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.