செய்திகள்

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் - ரியா விவகாரத்தில் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல்

பிரிந்து வாழும் லியாண்டர் பயஸ் - ரியா விவகாரத்தில் உடன்பாடு ஏற்படாததால் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் விசாரணையை 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

மாலை மலர்

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீரராக திகழ்பவர் லியாண்டர் பயஸ். இவர் மாடல் அழகி ரியா பிள்ளையுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ரியா பிள்ளை பிரபல நடிகர் சஞ்சய் தத்தை ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்தானவர் ஆவார்.

லியாண்டர் பயசும், ரியா பிள்ளையும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நிரந்தரமாக பிரிந்து வாழ்வதற்கான உடன்பாட்டை எட்டுவதில் சிக்கல் எழுந்ததால் இருவரும் சுப்ரீம் கோர்ட்டை நாடினர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பயசும், ரியாவும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

இந்த வழக்கில் ரியா சார்பில் ஆஜரான வக்கீல் தனது வாதத்தில், பயஸ் தனது மகளுக்காக ரியாவுக்கு ஒரு வீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த பயசின் வக்கீல், ரியா ஏற்கனவே சஞ்சய் தத்திடம் இருந்து வீடு ஒன்றை வாங்கி இருப்பதால், பயஸ் வீடு வழங்கமாட்டார் என்று கூறினார்.