திரிணாமுல் காங்கிரசில் இணைந்த லியாண்டர் பயஸ் 
செய்திகள்

மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த டென்னிஸ் சாம்பியன்

திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ள டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ் தனது இளைய சகோதரர் என்று மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

மாலை மலர்

பனாஜி:

கோவா மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த சுற்றுப்பயணத்தின்போது, பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் இன்று மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். 

லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தது குறித்து மம்தா பானர்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். லியாண்டர் பயஸ் தனது இளைய சகோதரர் என்றும், இளம் வயதில் அமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே அவரை அறிவேன் என்றும் மம்தா கூறியிருக்கிறார். 

முன்னதாக நடிகையும் சமூக ஆர்வலருமான நஃபிசா அலி, நடிகை மிருணாளினி தேஷ்பிரபு ஆகியோர் மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர்.