3-வது முறையாக விம்பிள்டன் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ள கெவின் ஆண்டர்சன், கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் உடன் மீண்டும் இணைந்து டென்னிஸ் விளையாட வேண்டும் என்பதுதான் கனவு என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கெவின் ஆண்டர்சன் மேலும் கூறுகையில் ‘‘நான் சிறு வயதில் ஏபி டி வில்லியர்ஸ் உடன் டென்னிஸ் விளையாடி உள்ளேன். அப்போது அவருக்கு 12 வயது. எனக்கு 10 வயது. அவர் ஒரு சிறந்த டென்னிஸ் வீரர். என்னை தோற்கடித்துள்ளார்.