செய்திகள்

ஆரணி அருகே கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை

ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி:

ஆரணி அடுத்த திருமணி கிராமத்தில் வந்தவாசி செல்லும் சாலையில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு மர்ம கும்பல் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT