செய்திகள்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிக்கு ரூ.1 கோடி பரிசு: தெலுங்கானா அரசு அறிவிப்பு

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் வீராங்கனை மிதாலிராஜை கவுரவிக்கும் விதமாக அவருக்கு தெலுங்கானா அரசு வீடு மற்றும் ரூ.1 கோடி வழங்கியுள்ளது.

ஐதராபாத்:

இந்தியாவில் மற்ற எந்த விளையாட்டுகளையும் விட கிரிக்கெட்டில் வீரர்கள் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக் கிறார்கள்.

அதே நேரத்தில் வீரர்களுக்கு கிடைக்கும் சம மரியாதை வீராங்கனைகளுக்கு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதேபோக்கும் விதமாக தெலுங்கானா அரசு கிரிக்கெட் வீராங்கனைக்கு பரிசுகளை அறிவித்து உள்ளது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் இவரது தலைமையிலான இந்திய அணி 2-வது இடத்தை பிடித்தது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது.

மிதாலிராஜை கவுரவிக்கும் விதமாக அவருக்கு தெலுங்கானா அரசு ரூ.1கோடி வழங்கியுள்ளது. மேலும் அதோடு 600 சதுரஅடி வீட்டு மனையும் வழங்கியுள்ளது. தெலுங்கானா விளையாட்டு மந்திரி அவரை பாராட்டி இதை வழங்கியுள்ளது.

இதேபோல மிதாலிராஜ் பயிற்சியாளருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. 35 வயதான மிதாலிராஜ் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் ஆவார்.

SCROLL FOR NEXT