தெலுங்கானா மந்திரிசபை விரிவாக்கம் 
செய்திகள்

தெலுங்கானா மந்திரிசபை விரிவாக்கம் - 2 பெண்கள் உள்பட 6 பேர் பதவியேற்பு

தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான மந்திரிசபையில் 2 பெண்கள் உள்பட 6 பேர் இன்று புதிய மந்திரிகளாக பதவியேற்றனர்.

மாலை மலர்

தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான மந்திரிசபையில் 12 பேர் மந்திரிகளாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், இரு பெண்கள் உள்பட 6 பேர் இன்று புதிய மந்திரிகளாக பதவியேற்றனர். ஐதராபாத் நகரில் உள்ள ராஜ் பவனில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.