செய்திகள்

லாலு பிரசாத்தின் மகன் அரசு பங்களாவை காலி செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

துணை முதல்-மந்திரிக்கான அரசு பங்களாவை காலி செய்ய லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்விக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. #Tejashwi #SupremeCourt

மாலை மலர்

பீகாரில் கடந்த 2015-ம் ஆண்டு ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்தது லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம். அப்போது கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்விக்கு துணை முதல்-மந்திரி பதவி கொடுக்கப்பட்டது. அவருக்கு துணை முதல்வருக்கான அரசு இல்லமும் ஒதுக்கப்பட்டது.

பின்னர் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜனதாவுடன் கூட்டணியை மாற்றிக்கொண்டது. இதனால் ராஷ்ட்ரீய ஜனதாதளம் மாநில அரசை விட்டு வெளியேறியது. தற்போது தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சித்தலைவராக உள்ளார். அவருக்கு வேறு பங்களாவும் ஒதுக்கப்பட்டது.

ஆனால் புதிய வீட்டுக்கு மாறாமல், துணை முதல்-மந்திரிக்கான அரசு வீட்டிலேயே அவர் தொடர்ந்து வசித்து வருகிறார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த 2 அமர்வுகள், துணை முதல்-மந்திரிக்கான அரசு பங்களாவை காலி செய்ய தேஜஸ்விக்கு உத்தரவிட்டன.