செய்திகள்

தேனி அருகே கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற இளம்பெண் மாயம்

தேனி அருகே கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற இளம்பெண் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

தேனி:

தேனி அருகே சின்னமனூர் மார்க்கையன்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்தவர் குமார் மகள் தேவி (15). சின்னமனூர் பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் செண்டரில் படித்து வருகிறார்.

சம்பவத்தன்று கம்ப்யூட்டர் சென்டர் செல்வதாக கூறி சென்றுள்ளார். அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவியை தேடி வருகின்றனர்.

பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் சின்னன்மகள் பாண்டீஸ்வரி (18). 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று அருகில் கடைக்கு செல்வதாக கூறி சென்ற பாண்டீஸ்வரி வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டீஸ்வரியை தேடி வருகின்றனர்.