கைது 
செய்திகள்

தஞ்சையில் கல்லூரி மாணவியை கிண்டல் செய்த வாலிபர் கைது

தஞ்சையில் கல்லூரி மாணவியை கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை கோரிகுளத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் வல்லத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாணவி வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் அவரை அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (வயது 23) மற்றும் இளமாறன் ஆகிய 2 பேர் கேலி- கிண்டல் செய்து வந்தனர். 

இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசில் மாணவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர். 

தலைமறைவாக உள்ள இளமாறனை போலீசார் தேடி வருகின்றனர்.