செய்திகள்

கடைசி போட்டியில் விளையாடும் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு ‘குட்லக்’ கூறிய இந்திய அணியினர்

கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்க இருக்கும் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வாழ்த்து கூறிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்றிரவு (புதன்கிழமை) நடக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹராவுக்கு இது கடைசி சர்வதேச போட்டியாகும். 18 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் நீடித்த 38 வயதான நெஹரா சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விடைபெறுகிறார். அவரை வெற்றியுடன் வழியனுப்பும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர்.