செய்திகள்

பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்து இருக்க வேண்டும்: சிவசேனா கருத்து

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்து இருக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலை மலர்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றது குறித்து சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்து இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் நமது கிரிக்கெட் வீரர்கள் நாட்டு மக்களின் பாராட்டை பெற்று இருப்பார்கள். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டதற்காக டெலிவிஷன் பெட்டிகளை உடைத்தும், கிரிக்கெட் வீரர்களின் உருவப்படத்தை கொளுத்தியும் துக்கம் கடைப்பிடித்த மக்கள் அதேநாளில் உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியதை வீதிக்கு வந்து கொண்டாடி இருக்க வேண்டும்.