செய்திகள்

குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக வகுப்பறையில் மாணவிகளின் உடையை கழற்றி தண்டித்த ஆசிரியை

ஆங்கில பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளின் உடையை கழற்றி தண்டித்த ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹரித்வார்:

உத்தரகாண்டின் ஹரித்வார் அருகே உள்ள லண்டோவ்ரா பகுதியில் ஜே.பி. சர்வதேச பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு படித்து வரும் 2 மாணவிகள் ஆங்கில பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்று இருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆங்கில ஆசிரியை, வகுப்பறையில் அந்த 2 மாணவிகளின் மேல் சட்டையை கழற்றவைத்தார்.

கடந்த 1-ந்தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து அந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் எடுத்து கூறினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 2 நாட்களாக பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் மூலம் மாணவிகளுக்கு நேர்ந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆசிரியையை பணியில் இருந்து நீக்கி பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மேலும் இது குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

SCROLL FOR NEXT