விபத்து 
செய்திகள்

பைக்கில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் பலி

கரூரில் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கரூர்:

கரூர் சின்னதாராபுரம் அருகே உள்ள அரங்கபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45) பள்ளி ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் இரவு சின்ன தாராபுரம் கடைவீதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு பின்னர் ஊருக்குப் புறப்பட்டார். தேர்முட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். 

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் இறந்தார். 

இந்த விபத்து குறித்து சின்னதாராபுரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அழகுராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT