ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. ஓவியம் வரையும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் ஆண்டிப்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியர் வேலை காலியாக இருப்பதாகவும், தனக்கு அதிகாரிகளை தெரியும்.
எனவே அந்த வேலையை உங்களுக்கு வாங்கி தருகிறேன் என கூறி உள்ளார். இதற்காக ரூ.4 லட்சம் செலவாகும் என தெரிவித்துள்ளார். அதன்படி முனியாண்டி, ஆனந்தனிடம் ரூ.4 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் 4 வருடங்களுக்கு மேலாகியும் ஆனந்தன் சொன்னபடி வேலையை வாங்கி தரவில்லை.
இதனால் தனது பணத்தை திருப்பி தருமாறு ஆனந்தன் வீட்டிற்கு சென்று முனியாண்டி கேட்டுள்ளார். இதற்கு ஆனந்தன் பணத்தை திருப்பி தர முடியாது. இனிமேல் பணம் கேட்டு இங்கு வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த ஆனந்தனை கைது செய்தனர்.#tamilnews