பெரும்பாறை:
வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாறை மலைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கம்பளி, போர்வை, கியாஸ் அடுப்பு போன்றவைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த அடுப்புகளை ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் வாங்கினார். இவர் மஞ்சள்பரப்பு கிராமத்தில் டீ கடை நடத்தி வருகிறார்.
கடையில் பால் சுடவைத்து டீ போட்டு கொண்டு இருந்தார். அப்போது அந்த அடுப்பு திடீரென வெடித்தது. அந்த அடுப்பில் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொறுத்தப்பட்டுள்ளது. கண்ணாடி சூடாகி வெடித்தது.
கடையில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யும் பொருட்கள் போலியானது. இதனால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.