செய்திகள்

மாநிலங்களவையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் வெளியேற்றம்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மாநிலங்களவையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.பிக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். #TDPMP #RajyaSabha #SpecialStatusforAndhra

புதுடெல்லி:

கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு பெரும்பாலான நாட்கள் முடங்கின. விவாதங்கள் எதுவும் நடத்தப்படாமல் நிதி மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கல் நிறைவேற்றப்பட்டன. காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, வங்கி மோசடி என பல்வேறு விவகாரங்களில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை கூட்டத்தொடர் முடிய உள்ள நிலையில், 21-வது நாளாக இரண்டு அவைகளிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முதலில் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததால் அவை நாள் முழுவதும் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இதையடுத்து ஆந்திரப்பிரதேச மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் எம்.பிக்கள் மாநிலங்களவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச எம்.பி. அவந்தி சீனிவாசுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மாநிலங்களவையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். #BudgetSession #RajyaSabha #SpecialStatusforAndhra #TDPMP #tamilnews