செய்திகள்

டாடா டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் வெளியீடு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள புதிய மாடலின் விலை மற்றும் முழு தகவல்களை பார்ப்போம்.

மாலை மலர்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் மூலம் டியாகோ வெற்றியை கொண்டாட வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

டாடா டியாகோ விஸ் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், 85PS / 114 Nm ரெவட்ரான் பெட்ரோல் இன்ஜின் அல்லது 1.05 லிட்டர், 3 சிலிண்டர், 70PS / 140 Nm டர்போ சார்ஜ்டு ரெவோடார்க் டீசல் இன்ஜின் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

டாடா டியாகோ விஸ் பெட்ரோல் ரூ.4.52 லட்சமும், டாடா டியாகோ விஸ் டீசல் ரூ.5.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் முன்னதாக வெளியான XT மாடலை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய விஸ் மாடலின் வெளிப்புறம் முந்தைய மாடலை விட அழகாக காட்சியளிக்கிறது.

வெளிப்புறத்தில் பெர்ரி ரெட் மற்றும் பிளாக் நிறமும், பெல்சென்ட் வைட் மற்றும் பிளாக் நிறம் கொண்ட டூயல் டோன் பெயின்ட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் டோன் வீல் கவர்களும், பிளாக் நிற ORVMஇ ரூஃப் ரெயில், பிளாக்டு-அவுட் பி-பில்லர், பெர்ரி ரெட் கிரில் ஹெட்லைட் மற்றும் பிளாக் ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது.