புதுடெல்லி:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சன் சப்காம்பாக்ட் எஸ்.யு.வி. இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஏழு-பேர் அமரக்கூடிய ஹெக்சா மற்றும் சப்காம்பாக்ட் செடான் டிகோர் ஆகிய மாடல்களை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டது. இவற்றைத் தொடர்ந்து 2017-இன் மூன்றாவது மாடலாக நெக்சன் அமைந்துள்ளது. முன்னதாக டாடா நெக்சன் சோதனைகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது.
டாடா நெக்சன் மாடல் இந்தியாவில் மாருதி சுசுகியின் விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் மஹேந்திரா டி.யு.வி.300 ஆகிய மாடல்களுக்கும் ஹூன்டாய் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் சப்காம்பாக்ட் எஸ்.யு.வி. மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
2014-இல் நடைபெற்ற ஆட்டோ விழாவில் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்படு, 2016 ஆட்டோ விழாவில் தயாரிப்பு கார் அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதிநவீன வடிவமைப்பு மற்றும் டூயல் டோன் அம்சங்களுடன் வெளியான ஸ்பை புகைப்படங்களில் இருந்து புதிய நெக்சா அனைவருக்கும் பிடித்தமான மாடலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
உள்பக்க வடிவமைப்பில் நெக்சன் அதிக இட வசதி மற்றும் புதிய வடிவமைப்புகளை கொண்டுள்ளது. அதன்படி மிதக்கும் திரை மற்றும் டிரைவ் மோட்கள் நெக்சன் காரில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்களாகியுள்ளது. இதன் டேஷ்போர்டு கிளாஸ் பிளாக் மற்றும் சில்வர் பிரெஷ்டு அக்சென்ட்களை கொண்டுMள்ளது. இத்துடன் லெதர் மற்றும் கிளாத் சீட்களை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
இதன் ரியர்பூட் மூன்று பேர் சவுகிரியமாக அமரக்கூடிய வகையில் உள்ளது. போல்ட் போன்று இல்லாமல் புதிய நெக்சன் முன்பக்க சீட்களிடையே அதிக இடவசதியை வழங்குகிறது.
மோட்டார் பிரிவுகளில் நெக்சன் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்டிருக்கும், இது டியாகோவில் வழங்கப்பட்ட 1.05 லிட்டர் இன்ஜினின் 4-சிலிண்டர் வகையை சேர்ந்தது ஆகும். இத்துடன் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.