டாடா நானோ மாடலின் எலெக்ட்ரிக் கார் கோயம்புத்தூரில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. டீம் பிஎச்பி குழுவினர் மூலம் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நானோ எலெக்ட்ரிக் கார், ஜென்எக்ஸ் பாடிவொர்க்கில் சோதனை செய்யப்படுகிறது.
தற்சமயம் சோதனை செய்யப்படும் நானோ எலெக்ட்ரிக் கார் வெளிப்புறம் பார்க்க சாதாரண நானோ போன்று காட்சியளிக்கும் நிலையில் கண்ணாடியில் '4BNEV-A08' ஸ்டிக்கர் கார் எலெக்ட்ரிக் பதிப்பு என்பதை தெரியப்படுத்தியுள்ளது.
டாடா நானோ எலெக்ட்ரிக் காரில் ல்த்தியம் அயன் பேட்டரிகளை கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கும் என கூறப்படும் நிலையில் புதிய கார் சார்ந்த இதர தகவல்கள் மர்மமாகவே உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் தொழில்நுட்பத்தை லண்டனில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஐரோப்பிய தொழில்நுட்ப மையத்தில் உருவாக்கி வருகிறது.
சமீபத்தில் டாடா டியாகோ, போல்ட் EV மற்றும் டாடா டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் வெளியிட்டது.
அந்தவகையில் நானா பிரான்டு பயன்படுத்து டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் மாடல்களின் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளசாக கூறப்படுகிறது. நானோவில் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் வழங்குவதன் மூலம் மற்ற மாடல்களிலும் எலெக்ட்ரிக் வழங்குவது எளிமையாகும்.