செய்திகள்

லாலாப்பேட்டை அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

லாலாப்பேட்டை அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

லாலாபேட்டை:

லாலாபேட்டை  அருகே சிவலிங்கபுரம் கிராமம் உள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று பொதுமக்கள் திடீர் என மதுக்கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது மனு ஒன்று கொடுங்கள், நாங்கள் உயர் அதிகாரியிடம் பேசி கடையை மூட தேவையான நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.