சேதராப்பட்டு:
நெட்டப்பாக்கம் அருகே மடுகரையில் தீயணைப்பு நிலையம் எதிரே தனியார் மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையின் பின்புறம் வயல்வெளியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். உடல் முழுவதும் அழுகி துர்நாற்றம் வீசியது. அவர் யார்- எந்த ஊர் என்பது தெரியவில்லை.
இது பற்றி தகவல் அறிந்ததும் மடுகரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்தும், மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அவரை யாராவது அடித்து கொன்று உடலை வயல்வெளியில் வீசி சென்றார்களா? அல்லது அதிக குடிபோதையில் அவர் இறந்து போனாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.