மரவள்ளி கிழங்கு 
செய்திகள்

சங்கராபுரம் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் மரவள்ளி சாகுபடி

விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால் சங்கராபுரம் பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் மரவள்ளி சாகுபடி செய்துள்ளனர்.

ரிஷிவந்தியம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் நீர் நிலைகள் வறண்டன. இதனால், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால் சங்கராபுரம் பகுதி விவசாயிகள் மரவள்ளி சாகுபடியில் சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளனர். 10 மாத பயிரான மரவள்ளிக்கு தண்ணீர் தேவை அதிகம் என்பதால் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஏற்ப தண்ணீரை சேமிக்கும் பொருட்டு நெடுமானூர், முலக்காடு, ஆலத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சொட்டு நீர் சாகுபடி செய்ய வேளாண்மை துறை சார்பில் மானியம் வழங்குவதால் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.