புதுடெல்லி:
பண மதிப்பிழக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு அடுத்து அதிக அளவில் பேசப்பட்ட பெயர் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் உடையது தான்.
பண மதிப்பிழக்க நடவடிக்கையின் போது சக்திகாந்த் தாஸ் பல்வேறு அறிவிப்புகளை தொடர்ந்து தகவல்களை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், பொருளாதார விவகாரங்களுக்கான செயலராக இருந்த சக்தி காந்த தாஸ் இன்றுடன் (மே 31) ஓய்வு பெற்றுள்ளார். அந்த பதவிக்கு கார்ப்பரேட் விவகார செயலாளராக இருக்கும் தபன் ராய் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
குஜராத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான தபன் ரே மோடி அரசு பதவியேற்ற பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கார்ப்பரேட் விவகாரத் துறை செயலராக பணியாற்றி வருகிறார். 1982 ஆண்டு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்த தபன் ரே குஜராத்தில் கடந்த 1984 முதல் 1994 வரை பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
தன்னுடைய ஓய்வு குறித்து டுவிட்டரில் குறிப்பிட்ட அவர், தனிப்பட்ட ஒரு நபராக முக்கிய விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கருத்துக்களை தெரிவிப்பேன் என்று கூறினார்.