செய்திகள்

மத்தியப்பிரேதேசம்: கவிழ்ந்த லாரியிலிருந்து மண்ணெண்ணெய் எடுக்க குவிந்த மக்கள்

மத்தியப்பிரேதேசம் மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் விபத்துக்குள்ளான லாரியிலிருந்து மண்ணெண்ணெயை பொதுமக்கள் ஆர்வத்துடன் கேன்களில் எடுத்துச் சென்றனர்.

மாலை மலர்

மத்தியப்பிரேதேசம் மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் மண்ணெண்ணெய் ஏற்றி வந்த லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியிலிருந்த  மண்ணெண்ணெய் கீழே கொட்டியது. இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வீடுகளிலிருந்து கேன்களை எடுத்து வந்து மண்ணெண்ணெயை பிடித்தனர்.


இதனால் அப்பகுதியில் கூட்டம் அதிகமானது. விபத்துக்குள்ளான லாரி திடீரென தீப்பிடித்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை கூட அறியாமல் மக்கள்  மண்ணெண்ணெயை எடுத்து செல்வதில் மும்முரமாக இருந்தனர்.