தஞ்சாவூர்:
தஞ்சை சி.ஆர்.சி.பணிமனை எதிரே சுண்ணாம்புகால்வாய் தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று கடை மேற்பார்வையாளர் வழக்கம் போல வேலை நேரம் முடிந்து இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது, கடையில் 7 அட்டை பெட்டியில் இருந்த மதுபான பாட்டிகள், மேஜை டிராயரில் இருந்த ரூ.8 ஆயிரம் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம கும்பல் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள், பணம் ஆகியவற்றை திருடிச்சென்றிருந்தது தெரியவந்தது.
கடையில் துணிப்பையில் சுற்றி வைத்திருந்த விற்பனை பணம் ரூ.6 லட்சம் கொள்ளையர்கள் கண்ணில் பட வில்லை. இதனால் ரூ.6 லட்சம் கொள்ளை போகாமல் தப்பியது. இந்த சம்பவம் குறித்து குறித்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.